முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் ரேசனில் எரிபொருள் வழங்கும் முறை விரைவில் அறிமுகம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2022      உலகம்
Sri-Lanka 2022 06 12

Source: provided

கொழும்பு ; இலங்கையில் ரேசன் முறையில் எரிபொருள் வழங்கும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கடுமையான வீழ்ச்சி, குறைந்து வரும் எரிவாயு இருப்புக்கள் மற்றும் உக்ரைனில் நிலவும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணங்களால் எரிபொருள் இறக்குமதி செய்ய இலங்கை சிரமப்படுகிறது. 

இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தன்னெழுச்சியாக மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். இலங்கையில் ரேசன் முறையில் எரிபொருள் வழங்கும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

அதன்படி, பொதுமக்களுக்கு ஒவ்வொரு வாரமும் அவர்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட வாராந்திர அளவிலான எரிபொருள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு, அடுத்த மாதம் முதல் இந்த முறை செயல்பாட்டுக்கு வரும். இலங்கயின் நிலைமை சீராகும் வரை நீண்ட காலத்திற்கு இந்த முறை தொடரும். 

இலங்கை பெட்ரோலிய கூட்டு ஸ்தாபனம், ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்கிறது. ஆனால், சிலர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலாக தேவையான எரிபொருளை பதுக்கி இருப்பு வைக்கின்றனர். இலங்கையில் நிலவும் இந்த பற்றாக்குறை நிலைமை, எரிபொருள் பதுக்கல் அதிகம் நடைபெற வழிவகுத்தது. 

எரிவாயு பற்றாக்குறையால் மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெய் தேவை அதிகரித்துள்ளது. 24 மணி நேர மின் விநியோகத்திற்காக, டீசலுக்கு மாதந்தோறும் 100 மில்லியன் டாலர் கூடுதல் செலவாகிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு 200 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மாதாந்திர எரிபொருள் கட்டணம் தற்போது 550 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. 

இலங்கையின் எரிபொருள் கொள்முதல் முற்றிலும் இந்தியாவை நம்பியே உள்ளது. இலங்கையின் குறைந்தபட்ச தினசரி டீசல் தேவை 5,000 மெட்ரிக் டன் ஆக உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் உதவியை நம்பியே இருக்கிறோம். இதனை இலங்கையின் எரிசக்தி துறை மந்திரி காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து