முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமெரிக்கா முயற்சி - சீனா குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2022      உலகம்
China 2022 06 12

Source: provided

பெய்ஜிங் ; சீனாவை எதிர்ப்பதற்காக ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.

சீனாவை எதிர்ப்பதற்காக ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்க் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்க் கூறுகையில், சீனாவை எதிர்ப்பதற்காக ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்க் குற்றம் சாட்டி உள்ளார். 

அமெரிக்கா பன்முகத்தன்மை என்ற போர்வையில் தனது நாட்டின் நலன்களை முன்னேற்ற முயல்கிறது. தைவான் சுதந்திரமாக தீவு எனவும் அங்கு சீனா தனது ராணுவ நடவடிக்கையை அதிகரித்தது தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்த குற்றச்சாட்டையும் மறுத்தார். மேலும், எந்த நாடும் தன் விருப்பத்தை மற்ற நாடுகள் மீது திணிக்கக்கூடாது. 

பன்முகத்தன்மை என்ற போர்வையில் பிற நாடுகளை கொடுமைப்படுத்த கூடாது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்ப்பதற்காக, இந்தோ-பசிபிக் என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிக்கான உத்தியாகும். இது மற்றவர்களைக் கட்டுப்படுத்தவும் மோதலையும் உருவாக்குவதற்கான ஒரு உத்தியாகும். சீனா தனது ராணுவத்தை விரைவாக நவீனப்படுத்தி வருகிறது. 

சமீபத்தில் சீனா, சாலமன் தீவுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. இது பசிபிக் கடற்பகுதியில் சீன கடற்படை தளம் உருவாகலாம் என பலர் அஞ்சுகின்றனர். தென் சீனக் கடல் பகுதிகளில் அமெரிக்க போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி எங்கள் பிராந்திய விவகாரங்களில் தலையிடுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளுடன் சீனாவிற்கு கடல்சார்ந்த பிரச்சினை உள்ளது. இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் கடல் சார்ந்த பிரச்சினைகளை தாங்களாகவே தீர்த்து கொள்ள வேண்டும். என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து