முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

777 சார்லி விமர்சனம்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      சினிமா
777-Charlie-Review 2022 06

Source: provided

படத்தில் 777 சார்லி என்கிற பெயரில் நடித்திருக்கும் நாய், பார்ப்போர் உள்ளங்களைக் கொள்ளை கொள்வது உறுதி. நவரசங்களையும் அந்நாய் வெளிப்படுத்தியிருக்கிறது என்றால் நம்புவது சிரமமாக இருக்கும்,

படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை நாய் இல்லாத காட்சிகளே இல்லை. அதுவும் பல்வேறு சேட்டைகள் செய்து நம்மைச் சோர்வில்லாமல் பார்க்கவைக்கிறது. முரடனுக்குக் காதல் வந்தால்? என்கிற கதைகளை ஏராளமாகப் பார்த்துவிட்டோம், இந்தப்படத்தில் முரடனுக்கு இன்னொரு உயிர்மீது பாசம் வந்தால்? என்னவெல்லாம் நடக்கும்? என்பதை அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள். சார்லியிடம் மாட்டிக்கொண்டு ரக்‌ஷித் அனுபவிக்கும் கொடுமைகள் அதன்பின் அனுபவிக்கும் பேரானந்தம் அதற்குப்பின் வரும் பெருஞ்சோகம் ஆகிய எல்லா உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகன் ரக்‌ஷித். சில காட்சிகளில் வரும் நாயகி சங்கீதா சிருங்கேரிக்கு அழகான கதாபாத்திரம். இரு காட்சிகளில் வருகிற பாபிசிம்ஹா நடிப்பு சிறப்பு. நோபின்பால் இசையில் படத்தின் கதையைச் சொல்லிச் செல்கின்றன பாடல்கள். அழகான உணர்வுகள், ஆழமான கருத்து ஆகியனவற்றை ஒருங்கிணைத்து ஒரு அழகான படத்தை எடுக்கத் துணிந்த இயக்குநர் கிரண்ராஜுக்கு பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து