முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 நாடுகளில் 18 டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் ஆர்.கே.

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      சினிமா
RK 2022 06 13

Source: provided

எல்லாம் அவன் செயல் என்ற முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமானார் ஆர்.கே. தொடர்ந்து என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ் என அடுத்தடுத்த படங்களிலும் தனது திறமையை நிரூபித்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார் இவர்.  ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் உண்டு. கைகளில் ஒட்டாமல் நரைமுடிக்கு டை அடிக்கும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பு இவருக்கு உலகெங்கிலும் பல்வேறு விதமான அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது. குறிப்பாக இவரது இந்த கண்டுபிடிப்பை பாராட்டி அதை அங்கீகரிக்கும் விதமாக மலேசிய, நைஜீரியா, பிரேசில் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மூலமாக 18 முனைவர் பட்டங்களை ஆர்கேவுக்கு வழங்கியுள்ளது. அத்துடன் மலேசியாவின் மிக உயரிய விருதான டத்தோ ஸ்ரீ பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற இந்த தயாரிப்பை கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக மார்க்கெட்டில் உலா வரச்செய்து இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளார் ஆர்கே. இன்னொரு பக்கம் சினிமா என்று இருந்தாலும் இதன் மூலமாக கிடைக்கும் தனது வருமானத்தில் 25 சதவீதத்தை ஏழை மக்களின் உதவிக்காக தனியாக ஒதுக்கி வைத்து விடுகிறேன் என்கிறார் ஆர்கே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து