முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீண்ட காலம் ஆட்சி செய்து 2-ம் இடம்பிடித்து, ராணி 2-ம் எலிசபெத் சாதனை

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      உலகம்
Elizabeth 2022 06 13

Source: provided

லண்டன் : உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி என்ற சாதனை படைத்த இரண்டாவது நபர் ஆனார் இரண்டாம் எலிசபெத். 

பிரிட்டன் வரலாற்றில் விக்டோரியா மகாராணி 63 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த நிலையில், அதை முறியடித்து 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்து இரண்டாம் எலிசபெத் வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

இவர் பிரிட்டன் ராணி என்று அழைக்கப்பட்டாலும், 16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி இவர் அரசியாக உள்ளார். மேலும் 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட காமன்வெல்த் எனப்படும், பிரிட்டிஷாரால் ஆளப்பட்ட நாடுகளின் கூட்டமைப்பிலும் பொறுப்பு வகிக்கிறார். இவை தவிர பிரிட்டன் திருச்சபையின் மிக உயரிய கவர்னராகவும் உள்ளார். பிரிட்டன் பிரதமர்களை தேர்வு செய்வதில் ராணியின் பங்கு மிக முக்கியமானதாகும்.

இவர் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் உள்பட 14 பிரிட்டன் பிரதமர்களின் காலகட்டங்களில் அரசியாக பொறுப்பு வகித்துள்ளார். பிரான்ஸ் தேசத்து மன்னர் பதினான்காம் லுாயிஸ், 1643-1715 வரை, 72 ஆண்டுகள், 110 நாட்கள் அரசராக இருந்து, இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து