முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      தமிழகம்
Congress 2022 06 13

Source: provided

சென்னை : சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடா்புடைய பணமோசடி வழக்கு குறித்து விசாரிக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் சோனியாவை ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.   

இதுதொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று ராகுல் காந்தி ஆஜரானார்.  அவரிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து