முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அவசரகால வெள்ள கடத்தும் கால்வாய் பணிகள் : அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      தமிழகம்
Duraimurugan 2022 06 13

Source: provided

சென்னை : சென்னை அருகே செம்மஞ்சேரி கால்வாய், ஒட்டியம்பாக்கம் ஓடை, மதுரப்பாக்கம் ஓடைகளை பள்ளிக்கரணை கழுவெளி வரை இணைக்கும் வகையில் அவசர கால வெள்ளக் கடத்தும் கால்வாய்கள் பணிகளை ரூ.165 கோடி மதிப்பில்  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். 

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்புப் பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் செல்வகுமார், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மற்றும் வண்டலூர் வட்டத்தில் உள்ள மதுரப்பாக்கம் ஓடை மற்றும் ஒட்டியம்பாக்கம் ஓடை முக்கியமான வெள்ள வடிகால்வாய் ஆகும். இவ்வோடைகள் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கிடைக்கப்படும் ஏரிகளின் உபரிநீர் மற்றும் மழைநீர் வடிந்து மேற்கண்ட கால்வாய்கள் வழியாக பள்ளிக்கரணை கழுவெளி சென்றடையும் வகையில் உள்ளது.  மேற்கண்ட இரு ஓடைகளும் 2015-ம் ஆண்டின் வெள்ளப்பெருக்கில் சுமார் 3000 கன அடிக்கு மேல் வெள்ள நீர் வடிந்து கழிவெளியினை அடைந்து ஒக்கியம் மடுவு மற்றும் பக்கிங்காம் கால்வாய் வழியாக முட்டுக்காட்டில் கடலில் சென்று கலக்கின்றது. 

ஓடைகளிலிருந்து டி.எல்.எப் குடியிருப்புக்கு வடமேற்கு பகுதிக்கு மேல் கால்வாய் தொடர்ச்சி இல்லாமல் இருப்பதினால், வெள்ள நீர்க் குடியிருப்பு பகுதிகளில் பரவி அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழைக்காலங்களில் சுமார் 3 முதல் 5 அடி அளவில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.

இதனை தவிர்க்கும் வகையில் தமிழக முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தற்போது ரூ. 165.35 கோடி மதிப்பில் இவ்விடத்தில் 6 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்த பிறகு ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இப்பகுதிகள் வெள்ளப் பாதிப்பிலிருந்து தவிர்க்கப்படும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து