முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது அணை திட்ட விரிவான அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் எதுவும் விவாதிக்க கூடாது : பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      தமிழகம்
Stelin 2022 02 23

Source: provided

சென்னை : மேகதாது தொடர்பான எந்த விவாதத்தையும் காவிரி மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், டெல்லியில் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் கூறியிருந்தார். மேலும், கர்நாடக அரசு மேகதாது அணையின் திட்ட வரைவு அறிக்கை குறித்து எழுத்துபூர்வமாக வாதங்களை முன்வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் மேகதாது அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது அதுகுறித்து ஆணைய கூட்டத்தில் விவாதிப்பது விதிமுறை மீறலாகும். ஆணையத்தின் இந்த முடிவு காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது. மேகதாது குறித்து கூட்டத்தில் விவாதிப்பது காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரம்பை மீறிய நடவடிக்கையாக அமையும். எனவே மேகதாது குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிப்பதற்கு தமிழக அரசின் பிரதிநிதி எதிர்ப்பு தெரிவிப்பார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் வரம்பு மீறிய செயல் நீதிமன்றத்திலும் ஆணையக் கூட்டத்திலும் சுட்டிக் காட்டப்படும். காவிரி பாசன விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மேகதாது தொடர்பான எந்த விவாதத்தையும் காவிரி ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழக அரசால் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது. இது தொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து