முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுப்பணித்துறை மேற்கொண்டு வரும் கட்டுமான பொருட்கள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      தமிழகம்
EVa-Velu 2022 06 13

Source: provided

சென்னை : சென்னை மண்டலத்தில் பொதுப்பணித்துறையால், பல்வேறு கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், மருத்துவமனை கட்டிடங்கள், மணி மண்டபங்கள் போன்றவை கட்டப்பட்டு வருகிறது.  இப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அனைத்துத் துறைகளின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், பொது மக்களுக்கு சேவை செய்வதே மருத்துவத்துறையின் தலையாயப் பணி.  அப்பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாத வண்ணம், மருத்துவமனை சார்ந்த கட்டிடங்களை சரியான முறையில் திட்டமிட்டு, விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தயானந்த் கட்டாரியா,  முதன்மைப்பொறியாளர் விஸ்வநாத், தலைமை கட்டிட வடிவமைப்பாளர் மைக்கேல் மற்றும் சென்னை மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து