முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக கவர்னர் டெல்லி பயணம்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      தமிழகம்
RN  Ravi-2022-02-03

பரபரப்பான அரசியல் சூழலில் நேற்று இரவு டெல்லி சென்றார் தமிழக கவர்னர். அவர் இன்று மத்திய அமைச்சர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சந்தித்து பேசினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவு 2022-க்கு ஒப்புதல் வழங்கிட கவர்னரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மொத்தம் 22 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு கவர்னர் ஆர்.என்.ரவியிடம், முதல்வர் பேசி இருந்தார். மேலும், தற்போது தேசிய அளவில் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான  ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

எதிர்க்கட்சிகள் சார்பாக மம்தா  பானர்ஜி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். பாஜக அல்லாத மாநில  கட்சிகளுக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய  அளவில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய பல்வேறு கட்சிகள்  தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலினும் மூத்த  திமுக உறுப்பினர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். குடியரசுத்  தலைவர் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுக்கலாம் என்பது குறித்தும் விவாதித்துள்ளார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு டெல்லி சென்றார். நேற்று இரவு 9 மணி விமானத்தில் டெல்லி சென்ற கவர்னர்  ஆர்.என்.ரவி, பீகாரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்து கொள்ள உள்ளார். அதை தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் சிலரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் கவர்னரின் டெல்லி பயணம் அவரது பர்சனல் பயணம் என்றே கவர்னர் மாளிகை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து