முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தர்மபுரி அருகே தேர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      தமிழகம்
Stalin 2021 10 25

Source: provided

பாப்பாரப்பட்டி : தர்மபுரி அருகே தேர் கவிழ்ந்த விபத்தில்  உயிரிழந்த 2 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியும், படுகாயம் அடைந்த 4 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே காளியம்மன் கோவிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான மக்கள் பங்கேற்றனர். திடீரென தேர் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதே அள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று  தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

இந்நிலையில், தேர்த்திருவிழாவின் போது திடீரென தேர் கவிழ்ந்தது. அப்போது தேர் பக்தர்கள் மீது விழுந்ததில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தர்மபுரி அருகே தேர் கவிழ்ந்த விபத்தில்  உயிரிழந்த 2 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியும், படுகாயம் அடைந்த 4 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க  முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து