முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதி, மதம் உட்பட எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை: முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : சாதி, மதம் உட்பட எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

உலக ரத்த தான தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், 

விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம்.  சாதி - மதம் - நிறம் - பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை.  குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்.  மானுடம் தழைக்கச் செய்வோம். இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து