முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். தலைமையில் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2022      தமிழகம்
OPS-EPS 2022-06-14

Source: provided

சென்னை : வரும் 23-ம் தேதியன்று நடைபெறவுள்ள அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழுக்கூட்டம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் எம்.ஜி.ஆர். மாளிகை, தலைமைக்கழக கூட்டரங்கில் நேற்று (ஜூன் 14) செவ்வாய்க்கிழமை தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரும் 23.6.2022 அன்று நடைபெற உள்ள கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும், என்னென்ன தீர்மானங்களை கொண்டு வரலாம் என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து