முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலைக்கழகங்களில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படும் : அமைச்சர் பொன்முடி தகவல்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2022      தமிழகம்
Ponmudi 2022 05 11

Source: provided

சென்னை : பல்கலைக் கழகங்களில் 69 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்படும் என்று உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளிலும் முழு பாடங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளிலும் முழுபாடங்களையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  அனைத்து  கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அமைச்சர் பொன்முடி சுற்றறிக்கை விடுத்துள்ளார்.  

மதுரை காமராஜர் பல்கலைக் கழக  மாணவர் சேர்க்கையிலும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் 31 சதவீத இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் மற்றும் கல்லுரிகளில் மாணவர் சேர்க்கை மட்டிமின்றி வேலைவாய்ப்பிலும் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்ற தமிழக அரசு உறுதி அளித்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழுமையாக நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து நடத்தப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புக்கு 39 சதவீதம், 11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம், 1-9-க்கு வகுப்புகளுக்கு 50 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து