முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாம்பரத்தில் தேஜஸ் விரைவு ரயில் நிற்காது தெற்கு ரயில்வே திட்டவட்டம்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2022      தமிழகம்
Tejas-train-2022-06-16

Source: provided

சென்னை ; சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில்  நின்று செல்லாது என்று தெற்கு ரயில்வே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ், தற்போது திருச்சி, திண்டுக்கல் போன்ற ரயில் நிலையங்களில் மட்டும் இடையில் நின்று செல்கிறது. சென்னையின் மூன்றாவது முனையமான தாம்பரம் ரயில் நிலையத்தில் இந்த தேஜஸ் விரைவு ரயில் நிற்பதில்லை. சென்னையில் புறப்படும் ரயிலில் 40 சதவீதம் அளவுக்கு தாம்பரம் மற்றும் புறநகா் பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் தேஜஸ் ரயிலில் பயணிக்கின்றனா். எழும்பூரில் காலை ஆறு மணிக்குப் புறப்படும் இந்த தேஜஸ் விரைவு ரயில், மதுரை சென்று திரும்பவும் சென்னை எழும்பூா் நிலையத்துக்கு இரவு ஒன்பதரை மணியளவில் வந்து சேருகிறது.

தற்போது தாம்பரத்தில் இந்த ரயில் நின்று செல்லாததால், தாம்பரம் உள்ளிட்ட புறநகா்ப் பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் எழும்பூா் வந்து ரயிலில் ஏறுவதற்கு சிரமப்படுகின்றனா். இதே மாதிரி இரவில் எழும்பூருக்கு வந்தடையும் ரயிலில் பயணிகள் தங்கள் இருப்பிடத்தைச் சென்றடையவும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

குறிப்பாக வாடகைக் கார் அல்லது ஆட்டோ வாகனங்களுக்கு கனிசமாக செலவும் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும். தாம்பரம் மற்றும் புறநகா்ப் பகுதி மக்கள் ஆரம்பம் முதலே கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ரயில்வே வாரியம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து