முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைனில் கடன் வழங்கும் மோசடி ஆப்புகளை டவுன்லோடு செய்யாதீர்கள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு வேண்டுகோள்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2022      தமிழகம்
Silenthra-Babu 2022 06 16

Source: provided

சென்னை ; செல்லிடப்பேசிகள் வழியாக கடன் வழங்கும் ஆப்புகள் மூலம் பல மோசடிகள் நடப்பதால், அவற்றை பெயர் குறிப்பிட்டு, டெலீட் செய்யுமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது, 

மக்கள் யாரும் ஏமாறக் கூடாது என்பதற்காக இந்த வீடியோவை பதிவிட்டுள்ளேன்.   கடன் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றும் சில மோசடி ஆப்கள் உள்ளன.  யூவால்ட், மாசென் ருபி, லாரி லோன், விங்கோ லோன், சிசி லோன், சிட்டி லோன் போன்ற இந்த ஆப்களை உடனடியாக டெலீட் செய்யவும்.  இவை அனைத்தும் மோசடியான ஆப்கள். இவற்றை செயல்பாட்டிலிருந்து நீக்க காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுபோன்ற ஆப்களை உங்கள் செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கம் செய்யாதீர்கள். ஒரு வேளை செய்திருந்தால், அதனை உடனடியாக டெலீட் செய்யவும்.  இது தமிழக காவல்துறையின் ஒரு வேண்டுகோள். சில நாள்களாக ஒரு புதிய விதமான ஆன்லைன் மோசடி நடைபெற்றுள்ளது. 

 

எனவே, இது போன்ற ஆன்லைனில் கடன் வழங்கும் ஆப்களை டவுன்லோட் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்து விட்டாலும் அதனை உடனடியாக செல்லிடப்பேசியிலிருந்து அகற்றி விடுங்கள். இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று சைலேந்திர பாபு வலியுறுத்தியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து