முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை பவனுக்கு 120 ரூபாய் அதிகரிப்பு

வியாழக்கிழமை, 16 ஜூன் 2022      வர்த்தகம்
Gold-2022-06-16

சென்னையில் தங்கம் விலை பவனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.38,040-க்கு விற்பனையானது.

சென்னையில் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.760 குறைந்து ஒரு பவுன் ரூ.37, 920க்கு விற்பனையானது. இந்த நிலையில், தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தங்கம் விலை மேலும் குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,715-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.37,720-க்கு விற்பனையானது.

இந்நிலையில், (நேற்று) வியாழக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.4,755-க்கு விற்பனையானது.. ஒரு பவுன் ரூ.38,040-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.66-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66,000 ஆக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து