முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு பிறகு தஞ்சையை சேர்ந்த இளம்பெண் கொரோனா தொற்றுக்கு பலி..!

வியாழக்கிழமை, 16 ஜூன் 2022      தமிழகம்
Corona 2021 06 15

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு தஞ்சாவூரில் 18 வயது இளம் பெண் உயிரிழந்தார். எந்த வகை வைரஸ் எனக்கண்டறிய ஆய்வகத்திற்கு மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் 14 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 257 பேரும், பெண்கள் 219 பேரும் உள்பட 476 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகாத நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் கொரோனாவுக்கு உயிரிழந்தார். 

இவருக்கு எந்தவித இணைநோயும் இல்லாத நிலையில், அவர் உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு கும்பகோனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்த இளம்பெண் எந்த வகையான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பதை கண்டறிய அவரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரி சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து