முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செயல்பட்டு வந்த 53 கடைகள் அகற்றம்

சனிக்கிழமை, 18 ஜூன் 2022      தமிழகம்
Meenashi 2022-06-18

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர பகுதியில் செயல்பட்டு வந்த 53 கடைகள் நேற்று அகற்றப்பட்டன. 

மீனாட்சி அம்மன் கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் படி அறநிலையத்துறை உத்தரவிட்டது.

மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில், கோவிலின் உள்ளே செல்லும் பகுதியில் அதிகளவில் கடைகள் உள்ளன. அந்த கடைகளை அகற்றும் பணி நேற்று காலை தொடங்கியது. கோவில் ஊழியர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், மூடிய கடைகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தினர். 

கிழக்கு கோபுர பகுதியில் 53 கடைகள் அகற்றப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 12 கடைகளை அகற்றக்கூடாது என்று கோர்ட் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. அதனால் அந்த கடைகள் அகற்றப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து