முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.10 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்கவே 25 நாள் வெளிநாடுகள் பயணம் : அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் விளக்கம்

சனிக்கிழமை, 18 ஜூன் 2022      தமிழகம்
PTR 2022-06-18

Source: provided

மதுரை : ரூ.10,000 கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்கவே 25 நாட்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தேன் என்று தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மதுரை எல்லீஸ் நகரில் தொழிலணங்கு தலைப்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த உறுப்பினர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார்.

அப்போது அவர், "எந்த ஒரு அரசியல் தத்துவம், கொள்கையை கூறிகொண்டே இருக்கிறமோ, அதை ஒரு விநாடி கூட மறக்காமல் எந்த நிகழ்விலும் விவாதத்திலும் ஒரு சட்டத்தை உருவாக்கும் போதும் கூட அந்த தத்துவத்திற்கும், கொள்கைக்கும் ஏற்புடையதா? இல்லையா? என்று சிந்தித்து செயல்பட வேண்டும். அந்த அடிப்படையில்தான் தற்போது தமிழக முதல்வர், அமைச்சர்கள் செயல்படுகின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்கும், உரிமைக்கும் திமுக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. தத்துவமும், கொள்கைக்கும் எந்தளவுக்கு முக்கியமோ அதற்கு ஏற்ப செயல்திறனும், திட்டமும் தேவை.

அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு சிந்தனை தேவை. சுய உதவிக்குழுக்கள் 23 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இந்த குழுக்கள், சில இடங்களில் சிறப்பாக நடந்ததும், சில இடங்களில் ஏற்றத்தாழ்வுகளுடன் நடந்தது. கணக்கு பட்டியல் கூட சில இடங்களில் சரியாக இல்லை. தற்போது அவற்றையெல்லாம் சரி செய்து தற்போது சுய உதவிக்குழு உறுப்பினர்களை தொழில் முனைவோராக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அதற்காக பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ஊக்கமும், உதவிகளும் தமிழக அரசு அளித்து வருகிறது. 

நான் 30 ஆண்டுகள் வெளிநாடுகளில் உயர்ந்த பொறுப்புகளில் பெரிய நிறுவனங்களில் இருந்துள்ளேன். தமிழகத்தில் வளர்ச்சி உருவாக்க வேண்டுமென்றால் உலக அளவில் பெரிய நிறுவனங்களுடன் தொடர்பு வேண்டும். அந்த தொடர்புகளை கொண்டுதான் தற்போது நான் உலகின் பெரிய நிறுவனங்களில் இருந்து 10 ஆயிரம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்க வேண்டும். அதற்காக நான் கடைசி 25 நாட்கள் அமெரிக்கா, கனடா, சிங்கபூர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றிருந்தேன். 

ஒவ்வொரு மாவட்டத்திலும், சட்டப்பேரவைத் தொகுதியிலும் அமைச்சர்களும், எம்எல்ஏ-க்களும் பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான், மகளிர் சுய உதவிகளுக்கும், பெண்கள் உரிமை, கல்வி, சொத்து உரிமை பெற்றுக் கொடுக்க முடியும். இந்த அடிப்படையிலே நாங்கள் செயல்படுகிறோம்." என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து