முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      தமிழகம்
Stalin 2021 10 25

Source: provided

சென்னை : கடினமான நேரங்களில்தான் ஒருவரின் உண்மையான வலிமையும் உறுதியும் தெரிய வரும் என்று முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.  அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தனது பிறந்த நாளை அமைதியாக கொண்டாடுமாறு காங்கிரசாருக்கு ராகுல் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்த நிலையில் பல்வேறு தலைவர்கள் ராகுல் காந்திக்கு பிற்ந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, 

அன்புக்குரிய இளவல் ராகுல் காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.  கடினமான நேரங்களில்தான் ஒருவரின் உண்மையான வலிமையும் உறுதியும் தெரிய வரும்.  இந்தச் சோதனையான காலத்தில் உங்களின் பற்றுறுதியையும் விடாப்பிடியான துணிவையும் நாடு கண்டுகொண்டிருக்கிறது.

பெருமைமிகு நமது குடியரசை மீட்டெடுக்கும் முயற்சியில் நீங்கள் வெற்றிபெற எனது வாழ்த்துகள். இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து