முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      தமிழகம்
Tovalai-market 2021 12 08

Source: provided

மதுரை : மதுரை ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகத்தில் நேற்று மல்லிகைப் பூ விலை கிலோ ரூ. 1600 ஆக இருந்தது. முகூர்த்த காலம் என்பதால் அடுத்த சில நாட்களுக்கு இந்த விலையில் மாற்றம் இருக்காது என வணிகர்கள் தெரிவித்துள்ளனர். 

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனை மலர் வியாபாரிகள் உள்ளனர்.

இங்கு மதுரை மட்டுமன்றி விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. எனவே மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நாள்தோறும் சராசரியாக 50 முதல் 60 டன்னுக்கும் மேலாக பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கடந்த சில நாட்களாக ரூ. 500 முதல் ரூ. 700 வரை மல்லிகைப்பூ விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதன் விலை கிலோ ரூ. 1600ஆக உயர்ந்தது. அதே போல பிச்சிப்பூ கிலோ ரூ. 400, முல்லை ரூ. 300, செண்டு மல்லி ரூ. 70, பட்டன் ரோஸ் ரூ. 80 விலைக்கு விற்கப்பட்டது. 

இது குறித்து  மதுரை மாட்டுத்தாவணி சில்லரை மலர் வணிகர் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறும் போது, மதுரையில் அடுத்த சில நாட்கள் முகூர்த்த காலம் என்பதால், மல்லிகைப்பூவின் விலையில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து