முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா சிகிச்சை பெறுவோரின் விவரங்களை அளிக்க வேண்டும் : தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      தமிழகம்
Chennai 2022-01-22

Source: provided

சென்னை : கொரோனா சிகிச்சை பெறுவோரின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

சென்னையில் கொரேனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகள் கொரோனா தினசரி விவரங்களை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தால், அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினால் தகவல் அளிக்க வேண்டும் என்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோரின் விவரங்களையும் மாநகர நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தினசரி விவரங்களை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து