முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடை காலம் முடிந்தது: காசிமேட்டில் விற்பனைக்கு குவிந்த சிறிய வகை மீன்கள்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      தமிழகம்
Kacime- 2022-06-19

Source: provided

சென்னை : தடை காலம் முடிந்த நிலையில் நேற்று முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் சிறிய வகை மீன்களே விற்பனைக்கு குவிந்திருந்ததால் அசைவ பிரியர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். 

தமிழகத்தில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் கடந்த 14-ம்  தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. தடைகாலம் முடிந்து 15-ம் தேதி முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தடைகாலம் முடிந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். தடைகாலம் முடிந்து நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமார் 100 விசைப்படகு மீனவர்கள் அதிகாலையில் கரை திரும்பினர். 

பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் அதிகாலை முதலே வியாபாரிகளும், பொதுமக்களும் மீன் ஏலம் விடும் பகுதியில் அதிக அளவில் குவிந்தனர். இதனால் காசிமேடு மார்க்கெட் முழுவதும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. சிறிய வகை மீன்களே விற்பனைக்கு வந்திருந்தன.

கடந்த வார விலையே நேற்றும் இருந்தது. வஞ்சிரம் உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் எதுவும் விற்பனைக்கு வராததால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மீனபிடி தடைகாலம் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு மொத்த வியாபாரிகள் மீன் ஏலக்கூடத்தில் வந்து மீன்களை மொத்தமாக வாங்கிச் சென்றதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காசிமேடு பகுதி மீண்டும் மீன் விற்பனையில் களை கட்டி இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து