முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த திட்டங்களை வகுக்க வேண்டும் : டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெற திட்டம் வகுக்குமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்யவேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

தற்போது நீலகிரியில் அமல்படுத்துவதுபோல, டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யும் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த திட்டம் வகுக்க சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்களையும் வெளியிட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும், மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக திட்டத்தை வகுத்து ஜூலை 15-ம் தேதிக்குள் அறிக்கை  ஒப்படைக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரியில் மட்டும் 29 லட்சம் மதுபாட்டில்களில் மதுபானங்கள் விற்கப்பட்டதாகவும் அதில் 18 லட்சம் மதுபாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து