முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒற்றை தலைமை விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: ஓ.பன்னீர் செல்வத்தால் தொண்டர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது: ஜெயக்குமார்

சனிக்கிழமை, 25 ஜூன் 2022      தமிழகம்
Jayakumar 2022-06-25

Source: provided

சென்னை : அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை என்றும், ஓ.பன்னீர்செல்வத்தால் தொண்டர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- 

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் 5 குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதற்கு எங்கள் தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் விளக்கமாக பதில் அளித்துள்ளார். அதை வைத்திலிங்கம் பார்த்து தெளிவு பெறுவது நல்லது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டபோது எடப்பாடி பழனிசாமி உடனடியாக கண்டித்தார். தொண்டர்களையும் அமைதிப்படுத்தினார். யாரையும் அவமதிக்கும் நோக்கம் தொண்டர்களுக்கு கிடையாது. 

வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மன உளைச்சலில் இருப்பதாக கூறுகிறார்கள். அவருக்கு ஏன் வீண் மன உளைச்சல். ஊரோடு ஒத்துவாழ் என்பார்கள். அனைவரும் ஒற்றை தலைமைக்கு ஆதரவு கொடுப்பது போல அவரும் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு கொடுத்து கட்சியினரோடு ஒத்து போயிருக்கலாம். ஆனால் அவர் கோர்ட்டை நாடுகிறார். தேர்தல் ஆணையத்தை நாடுகிறார். 

ஓ.பன்னீர்செல்வத்துக்கு மன உளைச்சல் இல்லை. அவர் செய்யும் கலகங்களால் அ.தி.மு.க. தொண்டர்கள்தான் மன உளைச்சலில் உள்ளனர். அ.தி.மு.க.வில் எடப்பாடி தலைமையிலான ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை. 3-வது நபரின் தலையீட்டை அ.தி.மு.க.வும் ஏற்காது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து