முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம்

சனிக்கிழமை, 25 ஜூன் 2022      தமிழகம்
ks alagiri-2022-05-12

Source: provided

சென்னை : அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- 

இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தராத, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டுமென்று தலைவர் ராகுல் காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அறைகூவல் விடுத்திருக்கிறது. 

இதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாளை 27-ம் தேதி திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. 

இந்நிலையில் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து