முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேழம் விமர்சனம்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2022      சினிமா
Ashok-Selvan 2022-06-27

Source: provided

கே 4 கிரியேஷன் கேசவன் தயாரிப்பில் சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் வேழம். கதை, ஊட்டியில் தொடர் கொலைகள் நடக்கின்றன. அவற்றில் நாயகன் அசோக் செல்வன் கண் முன்னேயே அவரது காதலி ஐஸ்வர்யாமேனன் கொலை செய்யப்படுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அக்கொலையைச் செய்தது யார் என்கிற துப்பு கிடைக்கிறது.  அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வது தான் வேழம் படம். மீசையில்லாமல் அதன்பின் அடர்ந்த தாடி மீசையுடன் அதிரடி காட்டும் அசோக்செல்வன், ஆகிய இரண்டுவித தோற்றங்களில் நடித்திருக்கிறார்.  ஐஸ்வர்யா மேனன்  காதல் காட்சிகளில் இயல்பான நெருக்கம் காட்டுகிறார். இன்னொரு நாயகி ஜனனி, முக்கிய வேடங்களில் கிட்டி, சங்கிலிமுருகன், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், கலை ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சக்தி அரவிந்த் ஒளிப்பதிவில் ஊட்டியின் இயற்கை அழகுகளும் நாயகன் நாயகிகளும் செழிப்பாக இருக்கிறார்கள்.  ஜானு சந்தர் இசை நன்று. கொலையில் தொடங்கி காதலாக நகர்ந்து துப்பறியும் வகைக்கு மாறுகிறது வேழம். இவை எல்லாமே இயல்பான போக்கில் அமைந்திருப்பதும் சுவாரசியமாக இருப்பதும் இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து