முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயோன் விமர்சனம்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2022      சினிமா
Mayon-Review 2022-06-27

Source: provided

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய இப்படத்தை என்.கிஷோர் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். மாயோன் மலை என்ற பகுதியில் பழங்கால கால கிருஷ்ணா் கோவிலை இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து வருகிறது. தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணராக பணிபுரிந்து வரும் நாயகன் சிபி சிலைகளை திருடி விற்கும் ஹரிஷ் பெராடியுடன் கூட்டணி வைத்து கோவில் புதையல்களை வெளிநாட்டுக்கு கடத்த நினைக்கிறார்கள். இன்னொருபுறம் சிலை கடத்தல் கும்பலை போலீஸ் தேடி வருகிறது. இந்நிலையில் இவர்களுடைய திட்டம் நிறைவேறியதா  இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை. சிபி அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். தான்யா ரவிச்சந்திரன் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். படத்தின் கதைக்களம் மாயோன் மலை, கிருஷ்ணர் கோயில் ஆகிய இடங்களை மட்டுமே சுற்றி நகர்கிறது. இயக்குனர். கே.எஸ் ரவிக்குமார் ராதாரவி, ஹரிஷ் பெராடி ஆகியோர் நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள். இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். மொத்தத்தில் மாயோனில் இன்னும் விறுவிறுப்பைக் கூட்டி இருக்கலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து