முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாம்பூச்சி விமர்சனம்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2022      சினிமா
Butterfly-Review 2022-06-27

Source: provided

1980-ன் பின்னணியில் உருவான ஒரு கிரைம் த்ரில்லர் கதைதான் இந்த பட்டாம்பூச்சி படத்தின் கதை. ஒரு தொடர் கொலைகாரனுக்கும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரிக்கும் இடையில் உள்ள சண்டையை சுற்றி இப்படம் நகர்கிறது . பத்ரி இயக்கிய இந்தப் படத்தில், சுந்தர்.சி. போலீஸ் அதிகாரியாகவும், ஜெய் தொடர் கொலைகாரனாகவும் வருகிறார்கள். இப்படத்தில் ஹனி ரோஸ் வர்கீஸ் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்தை குஷ்பு தயாரித்துள்ளார். இ கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, ஃபெனி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ளார். முதல் பாதி நம்பத்தகுந்த காட்சிகள், குழந்தை துஷ்பிரயோகம் கொலை, மற்றும் காதல் உள்ளடங்கிய பிளாஷ்பேக் எபிசோடாவும் இரண்டாம் பாதி நெடு நீளமாகவும் கசப்பாகவே நகர்கிறது. நவநீத் சுந்தரின் இசையும் சுமார் ரகமே. தேவையற்ற காட்சிகளை தவிர்த்து நீளத்தை குறைத்திருந்தால் இந்த பட்டாம்பூச்சியும் வானில் சிறகடித்து பறந்திருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து