முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3டி யில் வெளியாகும் விக்ராந்த் ரோனா

திங்கட்கிழமை, 27 ஜூன் 2022      சினிமா
Vikrant-Rona 2022-06-27

Source: provided

கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தில் கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி கதாநாயகர்களாக நடித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் மற்றும் நீதா அசோக் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பேண்டஸி ஆக்ஷ்ன் அட்வென்சர் படமாக 3டி தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. முன்னதாக தமிழில் நடிகர் தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரெயிலரை வெளியிட்டார். இந்தப் படத்தை கிச்சா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து