முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலாஜியிடம் கதை கேட்ட விஜய்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2022      சினிமா
R J Balaji 2022-06-27

Source: provided

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, நடித்து, சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இதனை ஒட்டி நடைபெற்ற வீட்ல விசேஷம் படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்துகொண்டு பேசிய ஆர்.ஜே.பாலாஜி, இந்த ஆண்டு ஜனவரி 27-ந் தேதி விஜய்க்கு கதை சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவருக்காக நான் இரண்டு மாசமா எழுதிய கதையின் ஒன் லைனை 40 நிமிடத்துக்கு சொன்னேன். அந்த கதையைக் கேட்டதும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மூக்குத்தி அம்மன் ஸ்டைல்ல ஜாலியான பேமிலி கதையா இருக்கும்னு எதிர்பார்த்தேன், ஆனா இது ஹை ஸ்கேல்ல இருக்கே, ஸ்கிரிப்ட் ரெடி ஆக எவ்வளவு நாள் ஆகும்னு கேட்டார். நான் ஒரு வருஷம் ஆகும் என்று சொன்னேன். மேலும் அவரிடம் எனக்கு எந்த அவசரமும் இல்ல, தளபதி 67, இல்லேனா தளபதி 77, அதுவும் இல்லேனா தளபதி 87 பண்றேன்னு சொன்னேன். இதை ஒரு பான் இந்தியா படமாகத் தான் அவரிடம் சொன்னேன்” என ஆர்.ஜே.பாலாஜி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து