முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று அபாயம்: இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. கட்டுப்பாடு

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2022      விளையாட்டு
BCCI 2022-06-28

Source: provided

பர்மிங்காம் : கொரோனா தொற்று அபாயம் காரணமாக இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வீதிகளில் சுற்றித்திரிந்த சில இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கண்டனமும் தெரிவித்துள்ளது 

கடைசி டெஸ்ட்...

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

பொது இடங்களில்... 

இந்த நிலையில் இந்திய அணியில் சில வீரர்களுக்கு பிசிசிஐ கண்டனம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இங்கிலாந்தில் பொது இடங்களில் சுற்றி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாக சில வீரர்களுக்கு பிசிசிஐ கண்டனம் தெரிவித்துள்ளது.மேலும் பிசிசிஐ, அத்தியாவசியமாக இருந்தால் மட்டும் வீரர்கள் வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விராட் கோலி ,ரிஷப் பண்ட் ஆகியோர் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து