முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு பெண்ணாக புடின் இருந்திருந்தால் போரில் இறங்கியிருக்க மாட்டார் : போரிஸ் ஜான்சன் சொல்கிறார்

புதன்கிழமை, 29 ஜூன் 2022      உலகம்
Boris-Johnson 2022 01 30

Source: provided

லண்டன் : ரஷ்ய அதிபர் புடின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், அவர் போரில் இறங்கியிருக்க மாட்டார் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:- 

புடின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், பைத்தியக்காரத்தனமான, ஆடம்பரமான படையெடுப்பு மற்றும் வன்முறைப் போரில் அவர் ஈடுபட்டிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. புடினின் உக்ரைன் படையெடுப்பு நச்சு ஆண்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு சிறந்த கல்வி மற்றும் அதிகாரப் பதவிகளில் அதிக பங்கு அளிக்க வேண்டும். நிச்சயமாக மக்கள் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆனால் இப்போதைக்கு அது நடக்க வாய்ப்பில்லை. எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை . புடின் எந்த சமாதானத்தையும் முன்வைக்கவில்லை என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து