முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 29 ஜூன் 2022      உலகம்
Canada 2022 06 29

Source: provided

ஒட்டாவா : கனடாவில் வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். 

கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமெரிக்கா எல்லை அருகே வான்கூவர் தீவில் இருக்கும் சானிச்சில் ஒரு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருந்தனர். திடீரென 2 பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்தனர். அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

தகவலறிந்து போலீசார், வங்கிக்கு விரைந்து வந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது 2 மர்ம நபர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மர்ம நபர்கள், 2 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மேலும் 6 போலீசார் படுகாயமடைந்தனர்.

இதற்கிடையே மர்ம நபர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கி அருகே வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, வங்கியில் புகுந்த கவச உடை அணிந்திருந்த 2 பேர், அதிக ஆயுதங்களை வைத்திருந்தனர். 6 போலீஸ் அதிகாரிகள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்றார்.

ஆனால் அந்த 2 பேர் பற்றிய எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை. வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கில் புகுந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து