முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பைடன் மனைவி, மகளுக்கு ரஷ்யாவில் நுழைய தடை

புதன்கிழமை, 29 ஜூன் 2022      உலகம்
Joe-Biden 2022 06 29

Source: provided

மாஸ்கோ : ரஷ்யாவில் நுழைய ஜோ பைடன் மனைவி, மகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் அமெரிக்கர்களுக்கு ரஷ்யாவும் பொருளாதார தடை விதித்து வருகிறது. 

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், மகள் ஆஷ்லே உள்ளிட்ட 25 பேர் ரஷ்யாவில் நுழைவதற்கு தடை விதித்து அதிபர் புடின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்ய எதிர்ப்பு உணர்வினை ஏற்படுத்தியதாக குடியரசு கட்சி எம்.பி.க்கள் மிட்ச் மேக்கனல், சூசன் காலின்ஸ், பென் சாசே, ஜனநாயக கட்சி எம்.பி. கிறிஸ்டின் ஜில்லிபிராண்ட் ஆகியோருக்கும் ரஷ்யாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து