முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நலக் குறைவு காரணமாக நடிகை மீனாவின் கணவர் மறைவு:: திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி

புதன்கிழமை, 29 ஜூன் 2022      சினிமா
Meena-Vidyasagar 2022 06 29

Source: provided

சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திரை பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தென்னிந்திய பிரபல பன்மொழி நடிகையான மீனா, தமிழ் சினிமாவில் நடித்திருப்பதோடு மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல‌ படங்களில் நடித்துள்ளார். இவரை அனைத்து மொழியினரும் தங்களுக்கு பிடித்த நடிகையாக அங்கீகரித்திருந்தனர்.

2019- ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை நடிகை மீனா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு நுரையீரல் தொற்று மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

ஆனால், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நன்கொடை வழங்குபவர்கள் யாரும் இல்லாததால் அவருக்கு சிகிச்சை அளிக்க இயல‌வில்லை. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் வித்யாசாகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். 

இந்நிலையில், மீண்டும் நுரையீரல் பிரச்னை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உயர் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வித்யாசாகர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரஜினி, சரத்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி மீனாவுக்கு ஆறுதல் கூறினர்.

திருமணத்திற்கு பிறகும் நடிகை மீனா தொடர்ந்து நடித்து வந்தார். 2021-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலுடம் மலையாளத்தில் தர்சனம் 2 என்ற படத்தில் நடித்தார். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனதையடுத்து, கடந்த ஆண்டு தனது திருமண நாளில், திருமண வரவேற்பு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்த மீனா, “என் வாழ்வில் வானவில் போல வந்து அழகாக ஓவியம் வரைந்தீர்கள்” என்று தனது கணவர் குறித்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!