முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 16 பேர் பலி

புதன்கிழமை, 29 ஜூன் 2022      இந்தியா
Bihar 2022 06 29

Source: provided

பாட்னா : பீகார் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 16 பேர் பலியாகினர்.

இங்குள்ள 38 மாவட்டங்களில் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேர், போஜ்பூர் மற்றும் சரண் ஆகிய மாவட்டங்களில் 6 பேர், மேற்கு சம்பாரண் மற்றும் அராரியா ஆகிய மாவட்டங்களில் நான்கு பேர், பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் இருவர் பலியாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

பீகார் அரசு அறிவித்துள்ள அறிக்கையில், சீரற்ற காலநிலையின் போது முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும்,  அரசு வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் பீகார் முதல்வர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"வீட்டிலேயே இருங்கள் மற்றும் மோசமான வானிலையில் பாதுகாப்பாக இருங்கள்," என்று முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். ஜூன் 20ஆம் தேதி பீகார் மாநிலம் முழுவதும் மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து