முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி த்ரில் வெற்றி: கடைசி ஓவரை உம்ரான் மாலிக்கிடம் கொடுத்தது ஏன்? ஹர்திக் விளக்கம்

புதன்கிழமை, 29 ஜூன் 2022      விளையாட்டு
Hardik-Pandya 2022 06 29

Source: provided

டப்லின் : அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி. அழுத்தம் நிறைந்த அந்த ஓவரை இந்திய அணிக்காக வீசி இருந்தார் இளம் வீரர் உம்ரான் மாலிக். அதற்கான காரணம் என்ன என்பது குறித்த விளக்கம் அளித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

சுற்றுப்பயணம்... 

இந்திய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்தினார். தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதில் கடைசி போட்டியில் ஆட்டம் இறுதி ஓவர் வரை சென்றிருந்தது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடி கொண்டிருந்த சமயம். அந்த ஓவரை இந்திய அணி சார்பில் உம்ரான் மாலிக் வீசி வெற்றி பெற செய்தார்.

நம்பிக்கை இருந்தது...

வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவிக்கையில்., ஆட்டத்தில் இருந்த அழுத்தத்தை புறந்தள்ளிவிட்டு உம்ரான் பந்து வீச நான் அனுமதித்தேன். அவர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அவரது பந்துவீச்சில் வேகம் உள்ளது. அப்படியொரு வேகத்தை எதிர்கொண்டு கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுப்பது கடினம். எதிரணியினர் சிறப்பாக பேட் செய்திருந்தனர். அதே நேரத்தில் அவர்களை எங்கள் பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்தியும் இருந்தனர். முதல் முறை கேப்டனாக தொடரை வென்றதில் மகிழ்ச்சி" என ஹர்திக் தெரிவித்தார். 

தலைமை தாங்கி... 

மேலும் அவர் தெரிவிக்கையில், அயர்லாந்து ரசிகர்களுக்குப் பிடித்த இரு இந்திய வீரர்கள் என தினேஷ் கார்த்திக்கையும் சஞ்சு சாம்சனையும் பாண்டியா குறிப்பிட்டுள்ளார். அயர்லாந்து ரசிகர்கள் அபாரம். அவர்களுக்குப் பிடித்தமானவர்கள் சஞ்சு சாம்சனும் தினேஷ் கார்த்திக்கும். ஆட்டத்தை அவர்கள் மிகவும் ரசித்தார்கள். அயர்லாந்தில் உள்ள கிரிக்கெட் சூழலையும் நாங்கள் அனுபவித்துள்ளோம். இந்திய அணிக்குத் தலைமை தாங்கி தொடரில் வெற்றி பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து