முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதன்கிழமை, 29 ஜூன் 2022      இந்தியா
election-commission-2021-09-09

Source: provided

புதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அப்பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 10-ம் தேதி...

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது.அதன்படி ஆகஸ்ட் 6-ம் தேதி துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனுத்தாக்கல்...

ஜூலை 5-ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கும் எனவும் வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய ஜூலை 19-ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 20-ம் தேதி வேட்புமனு மீது பரிசீலனை நடைபெறும் எனவும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூலை 22 கடைசி தினம் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 543 மக்களவை உறுப்பினர்கள், 233 மாநிலங்களவை உறுப்பினர்கள், 12 நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல்...

இதற்கிடையே இந்தியக் ஜனாதிபதி தோ்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பாக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து