முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக நலத்துறைக்கு ரூ.7.34 கோடி நிதி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

புதன்கிழமை, 29 ஜூன் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது 21.04.2022   அன்று  தமிழக சட்டப் பேரவையில்  அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் பொருட்டு மொத்தம் ரூ.7.34 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.  

தமிழக சட்டப்பேரவையில் 21.04.2022 அன்று மானியக் கோரிக்கையின் போது,  எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணித்திட 85.00 லட்சம் ரூபாய் செலவினத்தில் 1,000 எண்ணிக்கையிலான மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும்.  இரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் உள்ளிட்ட விரிவான தீவிர விழிப்புணர்வு இயக்கத்தை 4.75 கோடி ரூபாய் செலவினத்தில் நடத்தப்படும். மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்களில், குழந்தைகளின் முதல் 1000 நாட்கள் குறித்த விழிப்புணர்வை 1.74 கோடி ரூபாய் செலவினத்தில் ஏற்படுத்தப்படும் போன்ற அறிவிப்புகள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால்  வெளியிடப்பட்டன. 

இந்த  அறிவிப்புகளை செயல்படுத்தும் பொருட்டு, எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணித்திட 85.00 லட்சம் ரூபாய் செலவினத்தில் 1,000 எண்ணிக்கையிலான மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் வழங்கவும், இரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் உள்ளிட்ட விரிவான தீவிர விழிப்புணர்வு இயக்கத்தை 4.75 கோடி ரூபாய் செலவினத்தில் நடத்தவும் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்களில், குழந்தைகளின் முதல் 1000 நாட்கள் குறித்த விழிப்புணர்வை 1.74 கோடி ரூபாய் செலவினத்தில் ஏற்படுத்தவும் ஆக மொத்தம் ரூ.7.34 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து