முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு: பணியில் இல்லாத ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      தமிழகம்
CM-1-2022 06 30

இராணிப்பேட்டை மாவட்ட அரசு விழாவிற்கு செல்லும் வழியில் காரைக்கூட்ரோட்டில், முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது, பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் மீது விளக்கம்கோரி  நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார்.  

மேலும், அந்த இல்லத்தில் உள்ள மாணவர்களிடம் பாடம் நடத்தும் முறை குறித்தும், வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். ஆசிரியர்களிடம் அம்மாணவர்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், அவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.  அந்த இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்த முதல்வர், ஆய்வின் போது, பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் மீது விளக்கம்கோரி  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து