முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பான் - ஆதாரை இணைக்காவிட்டால் இன்று முதல் 1,000 ரூபாய் அபராதம்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      இந்தியா
Pan-Card-2022-06-30

நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30-ம் தேதி (நேற்று) கடைசி நாளாகும். ஒரு வேளை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவிட்டால் இன்று முதல் இரண்டு மடங்கு, அதாவது. ரூ. 1,000  அபராதம் செலுத்தவேண்டியிருக்கும்.

இல்லையென்றால், ஜூலை 1ம் தேதி (இன்று) முதல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் இரண்டு மடங்காகிவிடும். அதாவது ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும் என்று மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்துள்ளது.

நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு பலமுறை நீட்டித்து வந்த நிலையில், தற்போது அதற்கு இறுதிக் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 30-ம் தேதிக்குள் ஆதார் - பான் எண்ணை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்க வேண்டுமென்றால், அபராதமாக ரூ.500 செலுத்தி 4 - 5 நாள்களுக்குப் பிறகுதான் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியும். ஜூலை 1ம் தேதி முதல் இந்த அபராதத் தொகை ரூ.1,000 ஆக அதிகரிக்கப்படுகிறது.

ஏற்கனவே, நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க மார்ச் 31ஆம் தேதிவரை கால அவகாசம் விதிக்கப்பட்டது. அவ்வாறு கடைசி தேதிக்குள் இரண்டையும் இணைக்காதவர்களின் நிரந்தர கணக்கு எண் (பான்) ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முடக்கப்பட்டது. அதோடு, ஏப்ரல் 1 முதல் 3 மாதங்களுக்கு அல்லது ஜூன் 30-ஆம் தேதி வரை ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்பிறகும், நிரந்தர கணக்கு எண்ணையும் ஆதாரையும் இணைக்காதவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகையை செலுத்திய பிறகே, முடக்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது அபராதத்துடன் தான் இணைக்க முடியும் என்ற நிலையில், அதுவும் இன்று இரண்டு மடங்காகிவிடும். எனவே, அபராதத்தை தவிர்க்க வருமான வரி செலுத்துபவர்கள் இரண்டும் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து