முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.விடம் ஆதரவு கோருகிறார்: ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் முர்மு நாளை சென்னை வருகை

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      இந்தியா
murmu-2022 06 30

Source: provided

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு ஜூலை 2ம் தேதி (நாளை) சென்னை வருகிறார். அப்போது அ.தி.மு.க.விடம் ஆதரவு கோருகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு (64) அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 25-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தனது வேட்புமனுவையும் முர்மு தாக்கல் செய்தார். மேலும், அவர் சார்பில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் ஷெகாவத் தலைமையிலான குழு பல்வேறு கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரி வருகிறது.அதுபோல முர்முவும், முக்கியக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். 

இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுகவிடம் கோரிக்கை விடுப்பதற்காக திரௌபதி முர்மு நாளை (ஜூலை 2) சென்னை வரவுள்ளார். அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களை அவர் ஆதரவு கோருகிறார்.  முன்னதாக, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தில்லியில் திரௌபதி முர்முவை திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து