முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசிய பேட்மிண்டன் தொடர்: பி.வி.சிந்து, பிரனாய் காலிறுதிக்கு தகுதி

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      விளையாட்டு
sindhu 2022 06 30

Source: provided

கோலாலம்பூர்: மலேசிய பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முதல் சுற்றில்...

கோலாலாம்பூரில் நடைபெற்று வரும் போட்டியில், 2-வது சுற்றில் தாய்லாந்து வீராங்கனை சாய்வானை எதிர்கொண்டார் சிந்து. முதல் செட்டை இழந்த சிந்து, அடுத்த இரு செட்களையும் வென்று வெற்றியை வசமாக்கினார். ஆண்கள் பிரிவில், இந்தியாவின் பிரனாய், சீன தைபே வீரரை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். 

சாய்னா நெஹ்வால்... 

முன்னதாக மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றார். முதல் சுற்றில் தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவாங்குடன் (10வது ரேங்க்) மோதிய சிந்து (7வது ரேங்க்) 21-13, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் 11-21, 17-21 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஐரிஸ் வாங்கிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். 

காஷ்யப் வெற்றி...

இப்போட்டி 37 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய முன்னாள் காமன்வெல்த் சாம்பியன் பாருபள்ளி காஷ்யப் 21-12, 21-17 என்ற நேர் செட்களில் கொரியாவின் ஹியோ க்வாங்கை வீழ்த்தினார். அவர் அடுத்த சுற்றில் தாய்லாந்தின் குன்லாவுட் விதித்சர்னை சந்திக்கிறார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமீத் ரெட்டி - அஷ்வினி பொன்னப்பா இணை 15-21, 21-19, 17-21 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் - செலினா ஜோடியிடம் 52 நிமிடம் போராடி தோல்வியைத் தழுவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து