முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர்களுக்கு கொரோனா தொற்று: காமன்வெல்த் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி பாதிப்பு..!

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      விளையாட்டு
30-Ram53

Source: provided

பெங்களூரு: இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் இரண்டு வீரர்கள், மூன்று துணை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

தொற்று உறுதி...

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் இரண்டு வீரர்கள், மூன்று துணை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக காமன்வெல்த் ஹாக்கி தொடருக்கான பயிற்சி தடைபட்டுள்ளது. 

தனிமையில்...

குர்ஜந்த் சிங் மற்றும் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் வீரர்கள் மற்றும் குழுவினருக்கு ஆடி-பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் தொற்று உறுதியானவர்களில் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

பயிற்சி முகாமில்...

பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக தற்போது வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். இந்த முகாம் ஜூலை 23 அன்று நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து காமன்வெல்த் தொடரில் பங்கேற்ற இந்திய ஹாக்கி அணி பர்மிங்ஹாம் செல்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து