முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய மருத்துவர்கள் தினம் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 1-ம் தேதி இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு வங்க முன்னாள் முதல்வர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து வரும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதல்வராக  உயர்ந்த மருத்துவர் பி.சி.ராயின் பிறந்தநாளான இன்று(நேற்று) தேசிய மருத்துவர்கள் தினம்.  பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம். இவ்வாறு அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!