முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரியா, ஜப்பானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்: வடகொரியா விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      உலகம்
KIM 2022 07 03

Source: provided

சியோல் : ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சமீபத்திய ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சித்துள்ளது. 

இது குறித்து வடகொரிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- ஆசிய பிராந்தியத்தில், நேட்டோ போன்றதொரு ராணுவக் கூட்டணியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க திட்டம் தீட்டியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறையாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

வடகொரியாவிடமிருந்து அச்சுறுத்தல் என்ற வதந்தியை அமெரிக்கா தொடர்ந்து பரப்புகிறது. தற்போதைய சூழ்நிலையில், பாதுகாப்பு மோசமடைவதை தீவிரமாக சமாளிக்க, எங்கள் நாட்டின் பாதுகாப்பை கட்டியெழுப்புவதற்கு அவசரமாக செயல்படுகிறோம் என்று வடகொரிய தெரிவித்தார். 

கடந்த வாரம் நேட்டோ உச்சிமாநாட்டின்போது, அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் தலைவர்கள் சந்தித்து, வடகொரியாவிற்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான கூடுதல் வழிமுறைகளை ஆராய ஒப்புக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து