முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராக்கெட்ரி விமர்சனம்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      சினிமா
Rocketry-Review 2022 07 04

Source: provided

மாதவன் முதன் முறையாக இயக்கி நடித்துள்ள படம் ராக்கெட்ரி. சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிறந்த விஞ்ஞானியாக தேசமே கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய நம்பி நாராயணனை தேச துரோகியாக்கி  சிறையில் அடைத்த கொடுமைகளையும், அதன் விளைவாக, அவரும், அவருடைய குடும்பமும் பட்ட கஷ்டமும், அவர்கள் கடந்து வந்த அவமானங்கள் ஆகியவற்றை உணர்ச்சி பொங்க கொடுத்துள்ள படம் தான் ராக்கெட்ரி. குறைந்த தொகையை கொண்டு எப்படியாவது ராக்கெட் எஞ்சினை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கனவுடன் இந்திய விஞ்ஞானிகளை அழைத்துக் கொண்டு பிரான்ஸ் செல்கிறார். அங்கு உருவாக்கப்படும் எஞ்சின் தொழில் நுட்பத்தை அந்நாட்டு  விஞ்ஞானிகளுக்கே தெரியாமல் கற்றுக்கொண்டு இந்தியா திரும்புகிறார். பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு குறைந்த செலவில் Liquid Fuel எஞ்சினை கண்டுபிடிக்கிறார். வெளிநாடுகள் பல நூறு கோடிகளை செலவழித்து கண்டுபிடித்ததை மிக மிக குறைந்த செலவில் சாத்தியமாக்கி சாதனை படைக்கிறார் நம்பி நாராயணன். இந்நிலையில் திடீரென காவல் துறையால் கைது செய்யப்படுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதே படத்தின் மீதிக் கதை. தவறான குற்றச்சாட்டால் ஒரு குடும்பம் இந்த சமூகத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர் கொள்கிறது என்பதை அரசியலோடு, எமோஷனலாக படமாக்கி நம்பி நாராயணனாக வாழ்ந்துள்ளார் மாதவன். இவரது மனைவியாக நடித்துள்ள சிம்ரன், கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளார். சூர்யா சில நிமிடங்களே வந்தாலும் ஈர்க்கிறார். படம் முழுவதும் டெக்னிக்கலான வார்த்தைகளாலும், ராக்கெட் தொழில்நுட்பம், அறிவியல் சார்ந்த வசனங்கள் இருப்பதால் படம் பார்க்கும் அனைவருக்கும் புரியுமா என்பது சந்தேகமே. சாம் சிஎஸ்-ன் பிண்ணனி இசை மற்றும் ஒளிப்பதிவாளர் சிர்ஷா ரே-வின் கேமரா படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. மொத்தத்தில் இந்த ராக்கெட்ரி – வெற்றியை நோக்கி பயணிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!