முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 14-ம் தேதி கோவை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் : அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

கோவை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 14-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் போது கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள படகுத்துறையை முதல்வர் திறந்து வைக்கிறார். மறுநாள் கோவை ஈச்சனாரி பகுதியில் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 14-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் 15-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள படகுத்துறையை திறந்து வைக்கிறார். 

அதன் பின்னர் கோவை ஈச்சனாரி பகுதியில் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகிறார். அதன் பின்னர் பொள்ளாச்சி செல்லும் முதல்வர்  தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். முதல்வரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஈச்சனாரி பகுதியில் முதல்வர் பங்கேற்கும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடத்தினை மதுக்கரை தாசில்தார் பர்ஸானா, வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து